/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 ரயில்களின் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
/
2 ரயில்களின் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம்
ADDED : டிச 30, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயில்வே யார்டு மேம்பாட்டு பணி காரணமாக, இரண்டு மின்சார ரயில்களின் சேவை இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
எழும்பூர் - விழுப்புரம் தடத்தில் உள்ள ஒலக்கூர் ரயில்வே யார்டில், இன்றும், நாளையும் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
l தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், தொழுப்பேடு வரை மட்டுமே இயக்கப்படும்
l விழுப்புரம் - சென்னை கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், தொழுப்பேடில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

