/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீரில் பாய்ந்த மின்சாரம் மாங்காடில் 2 பெண்கள் மீட்பு
/
மழைநீரில் பாய்ந்த மின்சாரம் மாங்காடில் 2 பெண்கள் மீட்பு
மழைநீரில் பாய்ந்த மின்சாரம் மாங்காடில் 2 பெண்கள் மீட்பு
மழைநீரில் பாய்ந்த மின்சாரம் மாங்காடில் 2 பெண்கள் மீட்பு
ADDED : நவ 03, 2024 12:34 AM

குன்றத்துார்,
குன்றத்துார் அருகே மாங்காடு நகராட்சியும், மலையம்பாக்கம் ஊராட்சியும் இணையும் பகுதியில் உள்ள சீனிவாசா நகர், அங்காளம்மன் கோவில் தெருவில், தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற, மாங்காடு நகராட்சி சார்பில் மின் மோட்டார் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த மின் மோட்டாருக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து, மின் இணைப்பு நேரடியாக கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி, 38, என்பவர் மின் மோட்டாரின் 'சுவிட்ச் பாக்ஸ்' அருகில் உள்ள தொட்டியில், மாட்டிற்கு தண்ணீர் ஊற்ற நேற்று சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதைப்பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த சசி, 36, என்ற பெண், அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
சுதாரித்த அப்பகுதி மக்கள், மரக்கட்டைகள் பயன்படுத்தி இருவரையும் மீட்டு, மாங்காடில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.