/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா திருத்தத்திற்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
/
பட்டா திருத்தத்திற்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
பட்டா திருத்தத்திற்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
பட்டா திருத்தத்திற்கு லஞ்சம் வி.ஏ.ஓ.,வுக்கு 2 ஆண்டு சிறை
ADDED : அக் 25, 2024 12:31 AM
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் அடுத்த மெய்யூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட பட்டாவில், சர்வே எண் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை மாற்றித்தரக்கோரி, சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் கன்னியப்பன், 68, என்பவரை, 2010, மே 25ல் அணுகினார். அவர், சர்வே எண்ணை திருத்த 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
இதை விரும்பாத முருகேசன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, கிராம நிர்வாக அலுவலரிடம் முருகேசன் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், கன்னியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த வழக்கை செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றினர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கிராம நிர்வாக அலுவலர் கன்னியப்பனுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

