/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் மொபைல் திருட்டு 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
/
ரயிலில் மொபைல் திருட்டு 2 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : டிச 24, 2024 01:21 AM
கொருக்குப்பேட்டை, சென்னை, எர்ணாவூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ், 38. திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த டிச., 9ம் தேதி, இரவு பணிக்கு செல்வதற்காக, விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து, பீச் செல்லும் புறநகர் ரயிலில் பயணம் செய்தார்.
அப்போது, தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகில், ராஜேஷ் சட்டை பையில் இருந்த மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு, ரயிலில் இருந்து இறங்கினர்.
இதுகுறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில், ராஜேஷ் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், பழைய வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளம், கொல்லாபுரி நகரை சேர்ந்த பரத்குமார், 18, திருவொற்றியூர், ரெட்டைமலை சீனிவாசன் நகரை சேர்ந்த முகமது ரியாஸ், 18, ஆகியோர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.