/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் ரயில்கள் ரத்து எதிரொலி 20 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
/
மின் ரயில்கள் ரத்து எதிரொலி 20 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
மின் ரயில்கள் ரத்து எதிரொலி 20 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
மின் ரயில்கள் ரத்து எதிரொலி 20 பஸ்கள் கூடுதலாக இயக்கம்
ADDED : டிச 08, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை கடற்கரை - - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், இன்று முதல் ஞாயிறுதோறும், மறு அறிவிப்பு வரும் வரை, நேர அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்தும், 10 ரயில்களை ரத்து செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயணியர் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் இனி ஞாயிறு தோறும் தாம்பரம் - பிராட்வே தடத்தில் 10, தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் - 5; கூடுவாஞ்சேரி - தி.நகர் - 5 என, மொத்தம் 20 மாநகர பேருந்துகள், கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று தெரிவித்துள்ளது.