ரயில் பாதை மேம்பாட்டு பணியால் 20 மின் ரயில் சேவையில் மாற்றம்
ரயில் பாதை மேம்பாட்டு பணியால் 20 மின் ரயில் சேவையில் மாற்றம்
ADDED : ஏப் 11, 2026 05:12 PM

சென்னை:சிங்கபெருமாள் கோவில் - செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே நடக்கும் ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, இந்த தடத்தில், 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:
* தாம்பரம் - விழுப்புரம் காலை 9:40 மணி, காஞ்சிபுரம் - கடற்கரை காலை 9:30 மணி 'பாஸ்ட்' மின்சார ரயில்களின் சேவை, இன்று ரத்து செய்யப்படுகிறது
ஒரு பகுதி ரத்து:
* விழுப்புரம் கடற்கரை மதியம் 1:30 மணி ரயில், தாம்பரம் வரை இயக்கப்படும்
* கடற்கரை - காஞ்சிபுரம் அதிகாலை 5:35 மணி ரயில், வாலாஜாபாத் வரை இயக்கப்படும்
* கடற்கரை - செங்கல்பட்டு காலை 8:10, 9:30 மணி ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் வரையிலும், 8:50, 10:00 மணி ரயில்கள், காட்டாங்கொளத்துார் வரையிலும் இயக்கப்படும்
* செங்கல்பட்டு - கடற்கரை காலை 8:45, 9:40 மணி ரயில்கள், சிங்கபெருமாள்கோவிலில் இருந்தும், காலை 10:40, 11:35 மணி ரயில்கள், காட்டாங்கொளத்துாரில் இருந்தும் இயக்கப்படும்.
வரும் 13 முதல் 16 வரை * கடற்கரை - செங்கல்பட்டு காலை 11:40, பகல் 12:40 மணி ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் வரையிலும், பகல் 12:28, மதியம் 1:45 மணி ரயில்கள், காட்டாங்கொளத்துார் வரையிலும் இயக்கப்படும்
* செங்கல்பட்டு - கடற்கரை மதியம் 1:10, 2:20 மணி ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் இருந்தும், மதியம் 1:45, மாலை 3:05 மணி ரயில்கள், காட்டாங்கொளத்துாரில் இருந்தும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
