/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1,000 பாஸ் விற்பனை 20 சதவீதம் உயர்வு
/
ரூ.1,000 பாஸ் விற்பனை 20 சதவீதம் உயர்வு
ADDED : நவ 03, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநகர போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பாதிப்புக்கு முன், 1,000 ரூபாய் மாதந்திர பாஸ் பெறுவது, 1.50 லட்சமாக இருந்தது. கொரோனா காலத்தில் பஸ் சேவை முடங்கி, இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தது.
இதனால், மாதாந்திர பேருந்து பாஸ் பெறுவது, 60,000 ஆக குறைந்தது. பின், படிப்படியாக உயர்ந்தது. புறநகரில் வேலைக்கு செல்வோர் அதிகரிப்பு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு உள்ளிட்ட காரணங்களால், மாதாந்திர பயணத்திற்காக, 1000 ரூபாய் பேருந்து பாஸ் பெறுவது தற்போது, 96,000 ஆக, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.