/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராயபுரம், திரு.வி.க., நகரில் 2,069 அடுக்குமாடி வீடுகள்
/
ராயபுரம், திரு.வி.க., நகரில் 2,069 அடுக்குமாடி வீடுகள்
ராயபுரம், திரு.வி.க., நகரில் 2,069 அடுக்குமாடி வீடுகள்
ராயபுரம், திரு.வி.க., நகரில் 2,069 அடுக்குமாடி வீடுகள்
ADDED : அக் 22, 2024 12:15 AM
சென்னை, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் மூன்று இடங்களில், மறு கட்டுமான திட்டத்தின்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 2,069 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுகிறது.
சென்னை பெருநகரில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள்உள்ளன. இதில் சிதிலமடைந்த, 20,000க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக மறு கட்டுமானம் மேற்கொள்ள வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சிதிலமடைந்த கட்டடங்களில் வசிப்போரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
மறு கட்டுமானத்திற்கான நிதியை, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் வாயிலாகவும், பிற திட்டங்கள், சி.எம்.டி.ஏ., வாயிலாகவும் நிதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் மூன்று இடங்களில், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, 269 வீடுகள் அடங்கிய புதிய, ஒன்பது மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதற்கான நிதி பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் பெறப்பட்டுள்ளது.
இதே மண்டலத்தில், சி.எம்.டி.ஏ.,வின் வடசென்னை வளர்ச்சி திட்ட நிதியில், 1,500 வீடுகள் அடங்கிய, 11 மாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது.
திரு.வி.க., நகர் மண்டலத்தில், 300 வீடுகள் அடங்கிய நான்கு மாடி குடியிருப்பு, வட சென்னை வளர்ச்சி திட்ட நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் இந்த குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

