/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
21 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் தகனம்
/
21 குண்டுகள் முழங்க ஏட்டு உடல் தகனம்
ADDED : ஜன 18, 2025 12:38 AM

திருவொற்றியூர்,
திருவொற்றியூர், சக்தி கணபதி நகரைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன், 44. மணலி போக்குவரத்து போலீசில், தலைமை காவலராக பணியாற்றினார்.
நேற்று முன்தினம் மாலை பணியின்போது, திடீரென மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனை மருத்துவரின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது.
நேற்று அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. இதில், ஆவடி கமிஷனர் சங்கர், கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின், அவரது உடல் ஊர்வலமாக, திருவொற்றியூர் - பட்டினத்தார் மின்மயானம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, 21 குண்டுகள் முழங்க, அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. பின், உடல் தகனம் செய்யப்பட்டது.