தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 21 தாசில்தார்கள் இடமாற்றம்

21 தாசில்தார்கள் இடமாற்றம்

21 தாசில்தார்கள் இடமாற்றம்


ADDED : நவ 12, 2025 12:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2025 12:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில், பல்வேறு புகார்களில் சிக்கிய மற்றும் ஓராண்டு நிறைவடைந்த 21 தாசில்தார்கள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில், 17 தாலுகாக்கள் உள்ளன. இதில், பெரம்பூர், திருவொற்றியூர், அம்பத்துார், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லுார், மதுரவாயல், அயனாவரம் ஆகிய தாலுகாக்களில் பணிபுரிந்த, தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மதுவிலக்கு, உதவித்தொகை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட துறைகளில் நியமிக்கப்பட்ட தாசில்தார்களும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், சென்னையில் 21 தாசில்தார்களை இடமாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுவாக ஒரு பணியிடத்தில், ஓராண்டு பூர்த்தியானபின், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப் படுவர். கலெக்டர் உத்தரவை மதிக்காதது, சான்றிதழ்களை உரிய அவகாசத்தில் வழங்காதது, பொதுமக்கள் புகார் போன்ற காரணங்களால் மூன்று, நான்கு மாதங்களில் சில தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us