/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னையை சேர்ந்த 22 பேர் தகுதி
/
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னையை சேர்ந்த 22 பேர் தகுதி
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னையை சேர்ந்த 22 பேர் தகுதி
தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி சென்னையை சேர்ந்த 22 பேர் தகுதி
ADDED : நவ 26, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில், பங்கேற்கும் தமிழக அணியில் சென்னையை சேர்ந்த 22 வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 69வது எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டி, கொல்கட்டா சால்ட் லேக் விளையாட்டு அரங்கில், வரும் ஜன., 15ம் தேதி துவங்க உள்ளது.
இதில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கான மாவட்ட தகுதிச்சுற்றுகள் முடிவில், சென்னை எஸ்.டி.ஏ.டி.,-யின் 22 வீரர் - வீராங்கனையர் தகுதி பெற்று அசத்தியுள்ளனர். போட்டி 14, 16, 19 வயதிற்கு உட்பட்டோர் என, மூன்று பிரிவில் நடைபெற உள்ளது.