ADDED : மே 04, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வில்லிவாக்கம், நேரு நகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்த முகமது சாதிக், 26, முகமது பர்வேஸ் ஆலம், 34, ஆகிய இருவரை கைது செய்து 166 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, சின்ன நீலாங்கரை, சிங்காரவேலன் தெருவில் உள்ள வீட்டில், குட்கா பதுக்கி விற்று வந்த மதுயிர் ரஹ்மான், 28, என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். வீட்டில் இருந்து 54 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.