/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 நாளில் 23 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
/
2 நாளில் 23 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின
ADDED : டிச 29, 2025 06:54 AM

சென்னை: மெரினா மற்றும் இ.சி.ஆரில், இரண்டு நாளில், 23 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
இ.சி.ஆரில் நீலாங்கரை முதல் அக்கரை இடையே, கடற்கரையில் இரண்டு நாளில், 15 ஆமைகள் மற்றும் மெரினா கடற்கரையில் எட்டு ஆமைகள் என, 23 ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. சில ஆமைகளின் கழுத்தில், டேக் கட்டப்பட்டிருந்தன. அவை வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாடுகளை சேர்ந்த ஆமைகளாக இருக்கலாம் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
இறந்த ஆமைகளை, வனத்துறை மருத்துவ குழுவினர், அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களில், அதிக எண்ணிக்கையில் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது, வனத்துறை மற்றும் சமூக ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமைகளின் தொடர் இறப்பு குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

