ADDED : செப் 05, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆகம விதிப்படி, ஹோமம் வளர்த்து திருமணம் செய்யப் படுவதில்லை.
மாறாக, தியாகராஜ பெருமான் சன்னிதியில், மாங்கல்யம் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டு, திருமணம் நடத்தப்படும்.
அதன்படி, ஆடி மாதம் முடிந்து, ஆவணியில் முக்கிய சுபமுகூர்த்த தினமான நேற்று காலை, திருவொற்றியூர் உட்பட, சென்னை சுற்றுவட்டாரப பகுதிகளில் இருந்து, 23 ஜோடிகளுக்கு, கோவிலில் திருமணம் நடந்தேறியது. புதுமண தம்பதியர், உறவினர்களால், தியாகராஜ சுவாமி கோவில் வளாகம் திக்குமுக்காடியது.