/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
25 இடத்தில் நில வகைப்பாடு மாற்ற ஒப்புதல்
/
25 இடத்தில் நில வகைப்பாடு மாற்ற ஒப்புதல்
ADDED : நவ 12, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் நிர்வாக குழு கூட்டம், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், 65 கோப்புகள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சி.எம்.டி.ஏ., திட்டங்களுக்கான கட்டுமான பணிகள் குறித்த டெண்டர்கள் தொடர்பாக, அதிகாரிகள் ஏற்கனவே எடுத்த முடிவுகள் தொடர்பான, 22 கோப்புகளுக்கு, பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் பின், தனியார் உரிமையாளர்கள் கோரிக்கை அடிப்படையில், 25 இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மேற்கொள்வதற்கான கோப்புகளுக்கு, குழும கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

