/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீவுத்திடலை பார்வையிட்ட 2.50 லட்சம் பேர்
/
தீவுத்திடலை பார்வையிட்ட 2.50 லட்சம் பேர்
ADDED : ஜன 29, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தீவுத்திடலில் சுற்றுலா வளர்ச்சி துறையின் சார்பில், 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, 12 முதல் நடக்கிறது. மார்ச் இரண்டாம் வாரம் வரை நடக்க உள்ளது.
இங்கு, ராட்டினம், ஊஞ்சல் உள்ளிட்ட 32 ராட்சத, சாகச விளையாட்டுகள், விதவிதமான உணவு விடுதிகளும், கேளிக்கை சார்ந்த அரங்குகள் உள்ளன. மாலையில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
விடுமுறை நாட்களில் காலை 10:00 மணி முதல், வார நாட்களில் மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சிக்கு இரு வாரங்களில், 2.50 லட்சம் பேர் வந்துள்ளனர். 2 லட்சம் பெரியவர்கள், 50,000 குழந்தைகள் பார்வையிட்டுள்ளனர்.