/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2,500 கிலோ காலாவதி மைதா கொட்டி எரிப்பு ஆவடி அருகே வெளிவட்ட சாலையில் அட்டூழியம்
/
2,500 கிலோ காலாவதி மைதா கொட்டி எரிப்பு ஆவடி அருகே வெளிவட்ட சாலையில் அட்டூழியம்
2,500 கிலோ காலாவதி மைதா கொட்டி எரிப்பு ஆவடி அருகே வெளிவட்ட சாலையில் அட்டூழியம்
2,500 கிலோ காலாவதி மைதா கொட்டி எரிப்பு ஆவடி அருகே வெளிவட்ட சாலையில் அட்டூழியம்
ADDED : ஏப் 10, 2025 12:16 AM

ஆவடி, ஆவடி அடுத்த வெள்ளானுார், புதிய அந்தோணியார் நகர், மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட அணுகு சாலையோரம், நேற்று காலை வானுயர அளவிற்கு குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சலசலப்பு ஏற்பட்டது.
விசாரணையில், காட்டூரில் உள்ள 'திருமுல்லைவாயில் மகளிர் தொழில் பூங்கா'வில் இயங்கும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, அணுகுசாலையோரம் உள்ள 200 சதுர அடி காலி இடத்தில் கொட்டப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
அங்கு, காலாவதியான 50 கிலோ எடையிலான 50க்கும் மேற்பட்ட மைதா மூட்டைகளை கொட்டி, குப்பையோடு குப்பையாக மர்ம நபர்கள் எரித்து சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவத்தால், வெளிவட்ட சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடும் அவதிக்குள்ளாகினர். ஆவடி - செங்குன்றம் காவல் எல்லையை ஒட்டி சம்பவம் நடந்ததால், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் கண்டுகொள்ளவில்லை. இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பட்டாபிராமைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன், 64, கூறியதாவது:
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட அணுகு சாலை பகுதி, குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. அதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் தான் கவனிக்க வேண்டும் என கூறி தட்டி கழிக்காமல், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

