ADDED : ஆக 08, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி, கிண்டி, நேரு நகரில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், 2,590 பேர் மனு கொடுத்தனர்.
அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, நேரு நகரில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் துரைராஜ் துவக்கி வைத்தார்.
மாலை 3:00 மணி வரை, 2,590 மனுக்கள் பெறப்பட்டன. இதில், பட்டா, சொத்துவரி பெயர் மாற்றம், பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்த, 20 பேருக்கு உடனடியாக தீர்வு கிடைத்தது.
அதற்கான சான்றிதழ், ஆணை உத்தரவை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதர மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.