/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல்
/
சென்ட்ரலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஜன 03, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர விரைவு ரயில் வந்தது.
இந்த ரயிலில் வந்த இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் பைகளை சோதித்த போது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.
விசாரணையில், அவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த யோகஸ்வரன் 24 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடம் 26 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.