/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போன், செயின் வழிப்பறி செய்த 26 பேர் கைது
/
போன், செயின் வழிப்பறி செய்த 26 பேர் கைது
ADDED : ஜன 29, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில் செயின் பறிப்பு மற்றும் மொபைல்போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தனிப்படை போலீசார், நேற்றுடன் ஏழு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் செயின் பறிப்பு, மொபைல்போன் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 16 வழக்குகளில் சிக்கிய, 26 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 26 சவரன் நகை, ஐந்து மொபைல் போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.