/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
27 மாடி சென்ட்ரல் சதுக்கம் 3 மாதங்களில் கட்டுமானம் துவக்கம்
/
27 மாடி சென்ட்ரல் சதுக்கம் 3 மாதங்களில் கட்டுமானம் துவக்கம்
27 மாடி சென்ட்ரல் சதுக்கம் 3 மாதங்களில் கட்டுமானம் துவக்கம்
27 மாடி சென்ட்ரல் சதுக்கம் 3 மாதங்களில் கட்டுமானம் துவக்கம்
ADDED : மார் 14, 2024 12:17 AM

சென்னை, சென்ட்ரல் சதுக்கத்தில் அமைய உள்ள 27 மாடி கட்டுமான பணி, அடுத்த மூன்று மாதங்களில் துவங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், மெட்ரோ ரயில், புறநகர் ரயில் நிலையம், பேருந்து நிலையம் என, முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்கு, தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, 2022ம் ஆண்டு மார்ச்சில் பூங்கா திறக்கப்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில், 27 மாடி உடைய பிரமாண்ட கட்டடம் கட்டப்பட உள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்ட்ரல் சதுக்கம், 525 கோடி ரூபாயில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்ட்ரல் சதுக்கத்தில் ஒரு பகுதியாக, 27 மாடி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மூன்று தரை கீழ்தளங்கள், ஒரு தரைதளம், 27 தளங்கள் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக, நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
அடுத்த மூன்று மாதங்களில், கட்டுமான பணிகளை துவங்க உள்ளோம். நட்சத்திர ஹோட்டல், தனியார் அலுவலங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற உள்ளன.
மொத்தம் 2000த்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் நிறுத்தும் வகையில் பிரமாண்ட பார்க்கிங் வசதி அமைக்கப்படும். கட்டுமான பணிகள் துவங்கி, அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

