ADDED : ஜூலை 30, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் 2.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஹவுரா விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு வந்தது. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எப்., படையினர். ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் மர்மமாக பை ஒன்று கிடந்தது. அவற்றை பிரித்து பார்த்ததில் மூன்று பண்டல்களில் 2.8 கிலோ கஞ்சா இருந்தது.
அதன் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்திய பயணி குறித்து விசாரிக்கின்றனர்.

