/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்
/
3 நாட்களில் 280 வீடுகள் அனகாபுத்துாரில் அகற்றம்
ADDED : மே 22, 2025 11:58 PM
அனகாபுத்துார்அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை, சாந்தி, காயிதே மில்லத், ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், ஆற்றங்கரையை ஆக்கிரமித்து, 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி, மே 20ம் தேதி துவங்கியது. முதல் நாளில், காலி செய்ய தானாக முன் வந்த, 20 பேருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று முன்தினம், 100 வீடுகள் இடிக்கப்பட்டன. மூன்றாவது நாளான நேற்றும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணி தொடர்ந்தது.
போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் வாகனங்களை கொண்டு, நேற்று 80 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.