ADDED : மார் 11, 2024 01:28 AM
அ நிறம் | அளவு
வேப்பேரி:சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, திருட்டு வழக்கில் தொடர்புடையோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் திருட்டு வழக்கில் தொடர்புடைய, பெண் ஒருவர் உட்பட, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, 3 சவரன் நகை, 50 கிராம் வெள்ளி பொருட்கள், 7 மொபைல்போன்கள், 4.23 லட்சம் ரொக்கம், 12 சைக்கிள், இன்வெர்ட்டர் பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.
