/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 29 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
/
திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 29 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 29 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் 29 சவரன், ரூ.2 லட்சம் திருட்டு
ADDED : டிச 18, 2024 12:09 AM
திருவள்ளூர், திருவள்ளூர் ஜெயின் நகரைச் சேர்ந்தவர் ராஜன் மனைவி சுந்தரி, 57. கணவர் இறந்துவிட்ட நிலையில், இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சுந்தரியின் மகள் கவிதா, அதே பகுதியில் வசித்து வருகிறார். இரவு நேரங்களில் சுந்தரி, மகள் கவிதா வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு, கவிதா வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். மறுநாள் காலை, தன் வீட்டிற்கு வந்து பார்த்த சுந்தரி, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 29 சவரன் தங்க நகை, 2 லட்சம் ரூபாய் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து, சுந்தரி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.