/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்திற்கு ரூ.2.93 கோடி குத்தகை நிலுவை
/
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்திற்கு ரூ.2.93 கோடி குத்தகை நிலுவை
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்திற்கு ரூ.2.93 கோடி குத்தகை நிலுவை
வேதகிரீஸ்வரர் கோவில் இடத்திற்கு ரூ.2.93 கோடி குத்தகை நிலுவை
ADDED : செப் 29, 2024 12:53 AM
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமான இடம், திருக்கழுக்குன்றத்திலும், சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ளன.
கோவில் இடத்தில், அடிமனை வாடகை, குத்தகை அடிப்படையில், கடைகள் உள்ளிட்டவை இயங்குகின்றன; சிலர் வீடுகள் கட்டி வசிக்கின்றனர்.
பெரும்பாலானோர் வாடகை மற்றும் குத்தகை செலுத்தாமல், பல ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ளனர். அத்தொகையை செலுத்துமாறு, கோவில் நிர்வாகம், குத்தகைதாரர்களுக்கு அறிவிப்பாணை அளித்துள்ளது.
குறித்த காலத்திற்குள் நிலுவைத் தொகையை செலுத்த தவறினால், ஹிந்து சமய அறக்கொடைகள் சட்டப்படி வாடகைதாரரை வெளியேற்றி, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, இடத்தை பொது ஏலத்தில் விடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், வாடகை மற்றும் குத்தகை விபரம் குறித்து, கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, பொது தகவல் அலுவலர் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கோவிலுக்கு சொந்தமான இடத்தை, மொத்தம் 249 பேர் பயன்படுத்துகின்றனர்.
5 லட்சம் ரூபாய்க்கும் மேல் 14 பேர், 2 - 5 லட்சம் ரூபாய்க்குள் 45 பேர், 2 லட்சம் ரூபாய்க்குள் 106 பேர், வாடகை நிலுவை வைத்துள்ளனர். மொத்தம், 2.93 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்நிர்வாகத்தின் ருத்ரகோடீஸ்வரர், ஓசூரம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட உப கோவில்களின் இட குத்தகை நிலுவை இதில் அடங்கவில்லை.