/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிடம் 'சில்மிஷம்' 2வது தந்தை கைது
/
மகளிடம் 'சில்மிஷம்' 2வது தந்தை கைது
ADDED : பிப் 13, 2025 12:13 AM
கொடுங்கையூர், கொடுங்கையூரைச் சேர்ந்தவர் 30 வயது பெண்மணி. இவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். முதல் கணவரை, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன், 33 வயதுடைய ஒருவரை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர், அடிக்கடி மது போதையில், 12 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரையடுத்து, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் இரண்டாவது தந்தையை கைது செய்தனர்.
புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து, எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி என்பதால், மாவட்ட சமூக நல நகர அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
நகர நல அலுவலர் ஜமுனாபாய், சிறுமியிடம் விசாரித்தார். தாய்க்கு உடல்நிலை சரியில்லாததை சுட்டிக்காட்டி, சிறுமியை, 22 வயது உறவுக்கார பையனுக்கு திருமணம் செய்து வைத்ததும், அதைத் தொடர்ந்து அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜமுனாபாய் அளித்த புகாரின் பேரில், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமியின் கணவர், பெற்றோர் மற்றும் மாமியார் உள்ளிட்ட ஐவரிடம் விசாரித்து வருகின்றனர்.