/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஏர்போர்ட்டில் 2ம் கட்ட பணிகள் வேகம்
/
சென்னை ஏர்போர்ட்டில் 2ம் கட்ட பணிகள் வேகம்
ADDED : செப் 21, 2024 12:35 AM

சென்னை, ன்னை விமான நிலையத்தில் இரண்டாம் கட்ட சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் 2.21 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைகிறது.
இரண்டு கட்டங்களாக, 2,467 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகள் 2018ல் துவங்கியது.இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச முனையமாக செயல்பட்டு வந்த மூன்றாவது டெர்மினல் இடிக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. புதிதாக அமைய உள்ள சர்வதேச முனையத்தின் புறப்பாடு பகுதியில் எட்டு நுழைவாயில், 60 செக்இன் கவுன்டர், 10 பாதுகாப்பு எக்ஸ்ரே ஸ்கேனர், ஒன்பது ரீமோட் போர்டிங் வாயில், எட்டு ஏரோ பிரிட்ஜ் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.
வருகை பகுதியில், உடைமைகளை கையாளும் பெல்ட்கள், பொருட்களை கண்டறியும் தானியிங்கி ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல அமைய உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் பணிகளை முடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.