/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது மண்டல குழு கூட்டம் ரூ.2 கோடியில் 36 தீர்மானம்
/
2வது மண்டல குழு கூட்டம் ரூ.2 கோடியில் 36 தீர்மானம்
2வது மண்டல குழு கூட்டம் ரூ.2 கோடியில் 36 தீர்மானம்
2வது மண்டல குழு கூட்டம் ரூ.2 கோடியில் 36 தீர்மானம்
ADDED : மார் 12, 2024 12:30 AM
குரோம்பேட்டை,
தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டல குழு கூட்டம், தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில், நேற்று நடந்தது.
இதில், இரண்டாவது மண்டலத்தில், பல்வேறு வகையான, பழைய மின் விளக்குகளை அகற்றி, 20, 70, 120, 200 வாட்ஸ் திறனில் புதிய எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இவ்விளக்குகளை, 'ஆன்' மற்றும் 'ஆப்' செய்ய தானியங்கி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், நகரில் புதிதாக அபிவிருத்தி அடைந்த பகுதிகள், மின் வாரியத்தால் புதிதாக அமைக்கப்பட்ட மின் கம்பங்களில், 187 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சாலை, மழைநீர் கால்வாய், சிறுபாலம் மற்றும் தண்ணீர் தொட்டி அமைத்தல், பூங்கா மற்றும் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு என, 2 கோடி ரூபாய் செலவிலான, 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.