/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்து மாணவர்களை வெட்டிய 3 பேர் கைது
/
வீடு புகுந்து மாணவர்களை வெட்டிய 3 பேர் கைது
ADDED : செப் 18, 2025 06:09 PM
அயனாவரம்: முன்பகையால், வீடு புகுந்து கல்லுாரி மாணவர்களை வெட்டிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
அயனாவரம், வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் அருள்மொழி வர்மன், 19; கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில், இவரது வீட்டில், அதே பகுதியைச் சேர்ந்த கல்லுாரி நண்பர்களான அபினேஷ், 18, அப்துல், 18 ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த அதே பகுதியைச் சேர்ந்த நால்வர், கல்லுாரி மாணவர்கள் மூவரையும் சரமாரியாக வெட்டினர்.
அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், அவர்கள் தப்பினர். காயமடைந்தவர்களை அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அயனாவரம் போலீசார் விசாரித்து, அயனாவரம், வீராசாமி தெருவைச் சேர்ந்த முட்டை சூர்யா, 22, சிலம்பரசன், 22, அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திக், 22 ஆகிய மூவரை கைது செய்தனர்.
விசாரணையில், மைதானத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சூர்யாவுக்கும் அபினேஷுக்கும் முன்பகை இருந்துள்ளது. அதன்காரணமாக, சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியுள்ளார். தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.