/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரீல்ஸ்'சுக்காக கத்தி வாங்கிய 3 பேர் கைது
/
'ரீல்ஸ்'சுக்காக கத்தி வாங்கிய 3 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:புளியந்தோப்பு, சுந்தராபுரம் நான்காவது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 23; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, 2.5 அடி நீளமுள்ள கத்தி இருந்தது. இதையடுத்து, ஆகாஷ், அவரது நண்பர் வெல்டிங் ராகுல், 24, இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதற்காக, திருநங்கை ஒருவரிடம் இருந்து கத்தியை வாங்கியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களுடன் தொடர்புடைய, புளியந்தோப்பு மதன்ராஜ், 38, என்பவரையும் கைது செய்தனர். மதன்ராஜ் மீது, திருட்டு உட்பட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.