ADDED : ஏப் 05, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
சென்னை: மேற்கு ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் ஹரிஷ், 23. இவர், கே.கே., நகர் 4வது செக்டாரில், களப்பொறியாளராக பணியாற்றுகிறார். இவர், நேற்று முன்தினம் காலை, கே.கே., நகர் முனுசாமி சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது அங்கு வந்த நான்கு பேர், ஹரிஷை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, 4,500 ரூபாய் மற்றும் மொபைல் போன், அவர் அணிந்திருந்த கவரிங் செயின் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுகுறித்து, விசாரித்த கே.கே., நகர் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, பெரும்பாக்கத்தை சேர்ந்த தனுஷ்குமார், 19, சைதாப்பேட்டையை சேர்ந்த சஞ்சய், 20, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட, மூன்று பேரை கைது செய்தனர்.
