UPDATED : மே 23, 2026 10:28 PM
ADDED : மே 23, 2026 10:23 PM
கோயம்பேடு: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம், எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 51; கொத்தனார். தன் சொந்த ஊரான திருவண்ணாமலை செல்ல, கடந்த 21ம் தேதி இரவு, கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார்.
விடியற்காலையில் தான் பேருந்து என்பதால், இரண்டாவது நடைமேடையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த மூவர், கத்தியால் ரமேஷின் கையில் வெட்டி, அவர் வைத்திருந்த 30,000 ரூபாயை பறித்து தப்பினர்.
கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரித்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மயிலாப்பூர், சாந்தோம் குடிசைப்பகுதியைச் சேர்ந்த ஜோஸ்வா, 20, சீனிவாசபுரம் மருதுபாண்டி, 21, நொச்சிக்குப்பம் தனுஷ், 24, ஆகிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 15,000 ரூபாய் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஜோஸ்வா மீது மூன்று திருட்டு வழக்குகள் உட்பட நான்கு வழக்குகள் உள்ளன.
