ADDED : ஜன 01, 2024 01:52 AM
திருநின்றவூர்:திருநின்றவூர், நாகாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 32; காய்கறி வியாபாரி.
இவர், கடந்த 29ம் தேதி இரவு ஆந்திர மாநிலத்தில் காய்கறிகள் இறக்கிவிட்டு, 4 லட்சம் ரூபாயுடன், 'ஈச்சர்' லாரியில்வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
திருநின்றவூர் அருகே நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் சிலர், அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதும் மர்ம நபர்கள் தப்பியோடினர்.
விசாரணையில், சந்திரசேகரிடம் பணம் இருப்பது குறித்து லாரி ஓட்டுனர் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பர்கள் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து, ஆவடி, பொத்துாரைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான சலீம், 45, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரைச் சேர்ந்த ஹனீபா, 32, மற்றும் செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கலைச் சேர்ந்த ராமு, 33, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.