/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியரிடம் போன் திருட்டு 3 பேர் கைது
/
பயணியரிடம் போன் திருட்டு 3 பேர் கைது
ADDED : டிச 24, 2024 01:16 AM
சென்னை,
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு நேற்று முன்தினம் இரவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பயணியர் ஏறினர்.
நெரிசலை பயன்படுத்தி, அங்கிருந்த வாலிபர் ஒருவர் பயணியரிடம் மொபைல்போன்களை திருடினார்.
இதை கண்காணித்த ரயில்வே போலீசார், போன் திருடிய சென்னை அம்பத்துார் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த வடிவேல் 30, என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவரது நண்பர்களுடன் சேர்ந்து மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வடிவேலுவின் நண்பர்களான பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் 28 மற்றும் அஜித்குமார் 30 ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஆறு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.