/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்
/
சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர்
ADDED : ஜன 27, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி திருமுல்லைவாயில் சுற்றுவட்டாரங்களில், இரண்டு மாதங்களில் 20க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் திருடு போயின. நேற்று முன்தினம், பாரதிநகரைச் சேர்ந்த மதன்குமார், 42, என்பவரின் சைக்கிள் திருடு போனது.
திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்தனர். இதில், சோழம்பேடு பிரதான சாலையைச் சேர்ந்த கார்த்திகேயன், 20, தென்றல் நகர் விஜயகுமார், 19, மற்றும் ரஞ்சன், 19, ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் திருடி விற்ற 15 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மாலை, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

