UPDATED : அக் 15, 2026 04:09 PM
ADDED : அக் 15, 2026 04:06 PM

ராயபுரம்: கர்நாடகாவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; ஆந்திராவில் லாரி ஓட்டுநர்.
இவர், கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத்தில் ஒரு நிறுவனத்தில் இருந்து லாரியில் ‘கியூப்ஸ்’ கிரைனைட் கற்களை ஏற்றி, சென்னை, எண்ணுாரில் உள்ள கார்கோ நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு, ராயபுரம், எஸ்.என்., சாலையில், முன்னால் சென்ற லாரியை, பாலகிருஷ்ணன் முந்த முயன்றார். இதில் அவர் ஓட்டிய லாரி விபத்துக்குள்ளானது.
இதில், சாலையில் நிறுத்தியிருந்த ‘ஹோண்டா ஆக்டிவா, ஸ்கூட்டி, பல்சர்ʼ ஆகிய இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. லாரியின் முகப்பு முழுதும் நொறுங்கியது.
பாலகிருஷ்ணனுக்கு காலில் காயங்கள் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
