/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத்தையை எரித்தபோது விபத்து 3 கார், 6 ஆட்டோ எரிந்து நாசம்
/
மெத்தையை எரித்தபோது விபத்து 3 கார், 6 ஆட்டோ எரிந்து நாசம்
மெத்தையை எரித்தபோது விபத்து 3 கார், 6 ஆட்டோ எரிந்து நாசம்
மெத்தையை எரித்தபோது விபத்து 3 கார், 6 ஆட்டோ எரிந்து நாசம்
ADDED : மே 30, 2025 12:10 AM

பம்மல் :பம்மலை அடுத்த சங்கர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட கார், ஆட்டோ போன்ற வாகனங்கள், சங்கர் நகர், 26வது தெருவில், பழைய காவல் நிலையம் இயங்கிய இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், நேற்று மதியம், மர்ம நபர் ஒருவர், அங்கு போடப்பட்டிருந்த பஞ்சு மெத்தையில் உள்ள இரும்பு கம்பிகளை எடுப்பதற்காக, அதை எரித்துள்ளார்.
அப்போது, தீ மளமளவென பரவி, அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பரவி, கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், மூன்று கார்கள், ஆறு ஆட்டோக்கள் எரிந்து நாசமாகின.
இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.