ADDED : செப் 19, 2024 12:48 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் கட்டவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்தோர் மோகனா, 36, பிரபாகரன், 49. இவர்கள், தங்கள் மாடுகளை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.
மேய்ச்சலில் இருந்து திரும்பி ஓட்டி வந்து மாலையில் கொட்டகையில் அடைத்தனர். அப்போது, மோகனாவின் பசு மற்றும் எருது, பிரபாகரனின் ஒரு பசு மாடு ஆகியவை மாயமானது தெரிந்தது.
இந்த நிலையில், கட்டவாக்கத்தில் இயங்கும் 'கூலண்டு ஆயில்' எண்ணெய் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு முன் உள்ள விவசாய நிலங்களில், வெவ்வேறு இடங்களில், மூன்று மாடுகளும் இறந்தது கிடந்தன.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தண்ணீரை குடித்து இறந்திருக்கலாம் என, வாலாஜாபாத் போலீசார் தெரிவித்தனர்.
எனினும், 'பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், மாடுகளின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்; அதன்பின் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வாலாஜாபாத் போலீசார் தெரிவித்தனர்.
