/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேட்டுக்குப்பத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு திடல்
/
மேட்டுக்குப்பத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு திடல்
மேட்டுக்குப்பத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு திடல்
மேட்டுக்குப்பத்தில் ரூ.3 கோடியில் விளையாட்டு திடல்
ADDED : பிப் 17, 2024 12:27 AM
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, மேட்டுக்குப்பம், தலைமை செயலகம் குடியிருப்பில், மாநகராட்சிக்கு சொந்தமான, 75,000 சதுர அடி காலி இடம் உள்ளது.
இதில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று கால்பந்து, கைபந்து, கூடைப்பந்து, கபடி, ஸ்கேட்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதோடு, காவலாளி அறை, ஒப்பனை அறை, குளியல் அறை மற்றும் இரவில் நடக்கும் விளையாட்டை பார்க்கும் வகையில், பிரமாண்ட ஒளி விளக்கு அமைக்கப்பட உள்ளது. இதற்கு மூன்று கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு மாதத்தில் பணி துவங்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.