/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தபால் தலை சேகரிப்பு 3 நாள் பயிற்சி முகாம்
/
தபால் தலை சேகரிப்பு 3 நாள் பயிற்சி முகாம்
ADDED : மே 22, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தின் தபால் தலைப் பிரிவு, கோடைக்கால தபால் தலை சேகரிப்பு பயிற்சி முகாமை, வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த உள்ளது.
பயிற்சி காலை 9:00 மணி முதல் பிற்பகல் மணி 1:30 வரை நடைபெறும். இப்பிரிவில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும், 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இதற்கான கட்டணம் 250 ரூபாய். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, 98405 90160, 98848 32872, 044 - 2854 3199 என்ற எண்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
***