ADDED : நவ 07, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,
வியாசர்பாடி, ரத்தினம் தெருவை சேர்ந்தவர் சத்யநாதன், 56. இவர், வியாசர்பாடி, முத்து முதலி தெருவில் டிபன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, சத்யநாதன் வியாபாரம் முடித்து டிபன் கடையை மூடி சென்றார்.
நேற்று காலை கடையை திறக்க வந்த போது, தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மூன்று சிலிண்டர்கள் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.