ADDED : அக் 21, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி,:திருவள்ளூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 53. இவரது மகனுக்கான அரசு தேர்வு, ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது.
மகன் தேர்வு எழுத சென்றுவிட்டார். அவருக்காக, ஓ.எம்.ஆரில் உள்ள மாந்தோப்பில் கிருஷ்ணமூர்த்தி தனியாக காத்திருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர், கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி, அவர் வைத்திருந்த, 5,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர்.
செம்மஞ்சேரி போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பெரும்பாக்கம் பகுதியில் ஆட்டோவை பிடித்தனர். விசாரணையில், பெரும்பாக்கத்தை சேர்ந்த அண்ணாமலை, 32, அஸ்வின், 28, சரத், 27, என தெரிந்தது. மூன்று பேரையும் கைது செய்தனர்.

