/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுச்சேரி நபர் வெட்டி கொலை இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது
/
புதுச்சேரி நபர் வெட்டி கொலை இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி நபர் வெட்டி கொலை இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது
புதுச்சேரி நபர் வெட்டி கொலை இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : அக் 30, 2025 03:55 AM
அசோக் நகர்: அசோக் நகரில் பட்டப்பகலில் புதுச்சேரி நபர் வெட்டி கொலை செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை, அசோக் நகர் 4வது அவென்யூவில் நேற்று மாலை, ஒரு பெண்ணுடன் காரில் வந்த நபர், அங்கு நின்ற மர்ம நபர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென அந்த கும்பல், அந்த நபரை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதை கண்டு உடன் இருந்த பெண் தப்பினார்.
இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அங்கிருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் கே.கே.நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த அசோக் நகர் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், உயிரிழந்த நபர் புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ், 38 என்பதும், தொழில் 'டெண்டர்' விஷயமாக சென்னைக்கு வந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக போக்குவரத்து கழக ஊழியர் தனஞ்செழியன், 42, சுகன்யா, 37 மற்றும் குணசுந்தரி, 27 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

