UPDATED : செப் 30, 2026 05:35 PM
ADDED : செப் 30, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, அண்ணாநகர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அகிலா, அயனாவரம் மகளிர் காவல் நிலையத்திற்கு, நேற்று மாற்றப்பட்டார்.
கோயம்பேடு சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், தரமணி சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், கோயம்பேடு சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை கமிஷனர் அமல்ராஜ் நேற்று பிறப்பித்தார்.
