/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய கட்டடத்தில் 3 ரேஷன் கடை, பாலகம்
/
புதிய கட்டடத்தில் 3 ரேஷன் கடை, பாலகம்
ADDED : டிச 18, 2025 05:10 AM
அரும்பாக்கம்: அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், எஸ்.பி.ஐ., பணியாளர் காலனியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், இரண்டு ரேஷன் கடைகள் செயல்பட்டன. இவற்றை கல்கி நகர், அசோகா நகர் பகுதிகளில் வசிக்கும் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக, பழைய கட்டடத்தில் இயங்கியதால், அவற்றை இடித்து புதிதாக கட்ட மாநகராட்சி திட்டமிட்டது.
அதற்காக அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் இருந்து, 48 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணிகள், இந்தாண்டு துவக்கத்தில் துவங்கி முழுமையாக நிறைவடைந்தது.
தற்போது இங்கு, மூன்று ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு கடைகளில், ஒன்று ஆவின் பாலகத்திற்கும், மற்றொன்று வருவாய் துறை தொடர்பான கடைக்கும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.
விரைவில் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கபட உள்ளன.

