/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாலை மழைக்கு சாய்ந்த 3 மரங்கள்
/
அதிகாலை மழைக்கு சாய்ந்த 3 மரங்கள்
ADDED : செப் 17, 2025 12:41 AM

அசோக் நகர், அதிகாலையில் பெய்த மழையில், அசோக் நகரில் 40 ஆண்டுகள் பழமையான மரம் உட்பட மூன்று மரங்கள், வேரோடு சாய்ந்தன.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மேல், காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. அப்போது, கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 131வது வார்டு, 11வது அவென்யூவில் நின்றிருந்த 40 ஆண்டுகள் பழமையான பெரிய வாகை மரம் உட்பட, இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இதனால், அச்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. அசோக் நகர், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலை என்பதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், பல மணி நேரம் போராடி இரு மரங்களையும் வெட்டி அகற்றினர்.
அதேபோல, 127வது வார்டு கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜ் குடியிருப்பிலும் ஒரு மரம் சரிந்து விழுந்தது. அதையும் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.