/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு பைக் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழப்பு
/
இரு பைக் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழப்பு
இரு பைக் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழப்பு
இரு பைக் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழப்பு
ADDED : ஜூன் 17, 2025 12:43 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு அருகே இரு பல்சர் பைக்குகள் நேருக்குநேர் பல்சர் மோதிய விபத்தில், வாலிபர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், காவிதண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 21. இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில், தன் நண்பர் ஒரக்காட்டுபேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 16, என்பவருடன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில், செங்கல்பட்டில் இருந்து காவிதண்டலம் நோக்கி சென்றார்.
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் பழத்தோட்டம் - ஒரக்காட்டுபேட்டை பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வந்த மற்றொரு 'பஜாஜ் பல்சர்' பைக் மோதியது.
இதில், பாலமுருகன் மற்றும் எதிரே பைக்கில் வந்த ஆத்துார் அண்ணா நகரைச் சேர்ந்த விஷ்வா, 19, ஆகியோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சூர்யா மற்றும் விஷ்வாவுடன் பைக்கில் வந்த ஆத்துார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிவசக்தி, 25, ரியாஷ், 25, ரஞ்சித், 24, ஆகிய மூவரையும், அங்கிருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார்.
செங்கல்பட்டு தாலுகா போலீசார், மூவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விஷ்வா நண்பர்களுடன் ஒரக்காட்டுபேட்டையில் உள்ள நண்பரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு, ஒரே பைக்கில் வந்தபோது விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.