/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடையின் பூட்டை உடைத்து 30 மொபைல் போன் திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து 30 மொபைல் போன் திருட்டு
ADDED : மே 24, 2025 11:53 PM
சிட்லப்பாக்கம் :குரோம்பேட்டை அடுத்த சிட்லபாக்கம், முத்துலட்சுமி நகரை சேர்ந்தவர் மகேஷ், 36. அதே பகுதியில், மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று, கடையை திறக்க வந்தபோது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின், உள்ளே சென்று பார்த்தபோது, பழுது பார்ப்பதற்காக வாங்கி வைத்திருந்த, 30க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், கல்லாவில் இருந்த, 10,000 ரூபாய் ஆகியவற்றை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு பேர், ஹெல்மெட்டுடன் கடைக்குள் புகுந்து, மொபைல் போன், உதிரி பாகங்கள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.