/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்; திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்
/
திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்; திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்
திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்; திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்
திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்; திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்
UPDATED : நவ 02, 2024 07:21 AM
ADDED : நவ 02, 2024 12:22 AM

சென்னை: சொந்த மாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 சதவீதம் பேர், வேலைக்கு திரும்பாததால், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகளை திட்டமிட்டபடி, 2028 இறுதிக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 118 கி.மீ., துாரத்திற்கு, 63,246 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதாவது, 45 கி.மீ., மாதவரம் -- சிப்காட்; 26.1 கி.மீ.,
மேலும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ்; 47 கி.மீ., மாதவரம் - - சோழிங்கநல்லுார் இடையிலான பணிகளை, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்து, மெட்ரோ பணியில் பிற மாநில ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபடுத்தி உள்ளன.
இருப்பினும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை. அவர்கள், தங்களின் சொந்த ஊர்களில் வேறு பணிகளுக்கு செல்கின்றனர். சென்னை மெட்ரோ பணியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், பலர் அருகே உள்ள மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ பணிகளில் இணைந்து உள்ளனர்.
சென்னை மெட்ரோ திட்டப் பணிகளில் பெற்ற அனுபவம், அவர்களுக்கு உள்ளூரில் பிற திட்டப்பணிகளை எளிதாக மேற்கொள்ள முடிவதாக தெரியவந்து உள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறையால், சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை திட்டமிட்டப்படி, 2028க்குள் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.